இலங்கையில் பழங்குடியின மக்கள் மத்தியில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
அதன்படி, பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தம்பானே, பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் பழங்குடியினர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக, பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்,அவர் நீண்ட காலமாக பல நோய் நிலைமைகளுடன் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மரண எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.