வாசுதேவவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு: திறப்பு விழாவை கைவிட்டு வெளியேறினார்!

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எஹலியகொட வலமுட்ட பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அப்பகுதியில் குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வந்த அமைச்சரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்கள் அமைச்சரை நோக்கி கூச்சலிட்டதை அடுத்து அவரது பாதுகாவலர்கள் அமைச்சரை வெளியேற்ற முயன்றனர்.

பின்னர் எஹலியகொட காவல் நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததையடுத்து அமைச்சர் திறப்பு விழாவை கைவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது! ஐக்கிய மக்கள் சக்தி

Leave a Reply