இலங்கையில் நேற்று (05) வியாழக்கிழமை 98 கொரோனா மரணிங்கள் பதிவாகியுள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு உயிரிழந்தவர்களில் 54 ஆண்களும், 44 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


