வளமான நாட்டை சீரழிக்கும் நரிக் குடும்பம்; மூளையை சரி செய்ய முடியவில்லை! விஜிதமுனி சொய்சா

வளமான நாட்டை ஒரு நரிக் குடும்பம் சீரழிக்கிறது என எதிர்க்கட்சியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அடுத்து மூன்று மாத காலத்திற்குள் எண்ணெய் கிடங்குகளை இந்தியா எடுத்தது கொள்ளும்.

அடுத்து நமக்கு எண்ணெய் இல்லை எண்ணெய் கிடங்குகளும் இல்லை.

இவர்கள் நாட்டை வீணடிக்கிறார்கள். ஒரே குடும்பம் ஒரு நரி கூட்டம் இவர்கள்.நாட்டையும் நாட்டு மக்களின் நிம்மதியை கெடுக்கின்றனர்.

என்னதான் தேவாலயங்கள் அமைத்தாலும்,என்ன செய்தாலும் இவர்களின் மூளையை சரி செய்ய முடியவில்லை
.
ஆகவே இவ் அரசாங்கத்தை திட்டுவதால் எந்த பயனும் இல்லை.

எனவே சரியான முறையில் தலைவரை, நிதியமைச்சர் தேர்வு செய்ய வேண்டியது நம் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply