விவசாய நிலங்கள் மட்டுமின்றி சமையலறையும் தீப்பற்றி எரிகின்றது! முட்டாள்தனமான முடிவே காரணம் என்கிறார் நளின் பண்டார

காபனிக் உரப் பிரச்சினையால் முழு நாடும் பற்றி எரிகின்றது. முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டையே அரசு தீக்கிரையாக்கியுள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உரப் பிரச்சினை காரணமாக விவசாய நிலங்கள் தீயில் எரிகின்றன. விவசாயிகளின் வயிறும் எரிகின்றது.

அதுமட்டுமன்றி சமையலறை தீப்பற்றி எரிகின்றது. முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டையே தீக்கிரையாக்கியுள்ளனர்.

மரத்தின் வேர்கள் வலுவிழக்கும்போது, கிளைகளைச் சபிப்பது பயனற்றது. அங்கு முழு அமைப்பும் உடைந்து விடுகின்றது.

ஜனாதிபதி, அதிகாரிகளைத் திட்டுவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதியின் முடிவுகளினாலேயே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது – என்றார்

Leave a Reply