வவுனியாவில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வவுனியாவில் இரு தினங்களில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று சனிக்கிழமை வெளியாகின.

மேலும் அதில், மகாறம்பைக்குளம் பகுதியில் ஐந்து பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கொக்குவெளி இராணுவ முகாமில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் இருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஏழு பேருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், கோயில்குளம் பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், ஓமேகா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் அனுராதபுரத்தைச் சேர்ந்த இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தை பகுதியில் ஒருவருக்கும், காத்தார் சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் இருவருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் இருவருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும், வவுனியாவில் வசிக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியாவில் பணிபுரியும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் கடந்த 5 நாட்களில் நேரியகுளம் பகுதியில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *