இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (31) முதல் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறுகின்றது.
புதிய விலையேற்றத்திற்கு அமைய, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 400 கிராம் பால்மாவின் புதிய விலையாக 540 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.