பால்மா பொதிகளின் விலை மீள அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவியினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 400 கிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 540 ரூபாயென்றும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 1,345 ரூபாயாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply