பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

<!–

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு எதிர்வரும் 3ஆம் திகதி ஒன்றுக்கூடவுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு ஒன்றுகூடவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற பட்டியல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற பட்டியல் நாளை (சனிக்கிழமை) முதல் அமுலாகும் இதுவரை தயாரிக்கப்படவில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியல் தயாரிப்பு பணிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply