மன்னாரில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில், மன்னார் முருங்கன் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் குறித்த போட்டி இடம்பெற்றது.

இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் பங்குபற்றின. இந்த இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது  ‘A, B, C, D, E’  ஆகிய 5 பிரிவுகளில் நடைபெற்றன.

இதன்போது ‘A‘பிரிவில் 1 ஆம் இடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியனுடைய காளையும் 2 ஆம் இடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசாவினுடைய காளையும் 3 ஆம் இடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலை சேர்ந்த சிந்தாத்துரையின் காளையும் பெற்றுள்ளன.

B‘ பிரிவில் 1 ஆம் இடத்தை நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வக்குமாரின் காளையும் 2 ஆம் இடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியனின் காளையும் 3 ஆம் இடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகாவின் காளையும் பெற்றுள்ளன.

C‘ பிரிவில் 1 ஆம் இடத்தை பூவரசன் குளத்தைச் சேர்ந்த நியாஸின் காளையும் 2 ஆம் இடத்தை பிடாரி குளத்தைச் சேர்ந்த நியூரனின் காளையும் 3 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த விஜயனின் காளையும் பெற்றுள்ளன.

D‘ பிரிவில் 1 ஆம் இடத்தை சிறுகண்டலை சேர்ந்த கென்றிகாவின் காளையும் 2 ஆம் இடம் மணற் குளத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளையுன் காளையும் 3 ஆம் இடத்தை உயிர்த்தராசன் குளத்தை சேர்ந்த அஜந்தனின் காளையும் பெற்றுள்ளன.

E’ பிரிவில் 1 ஆம் இடத்தை நானாட்டானை சேர்ந்த குகனின் காளையும் 2 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த ரூபராஜின் காளையும் 3 ஆம் இடத்தை வட்டக்கண்டலைச் சேர்ந்த அஜித்குமாரின்  காளையும் பெற்றுள்ளன.

மேலும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏனைய மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *