பஸ்ஸில் பயணம் செய்த ஒமிக்ரான் தொற்றாளர்கள்! திடுக்கிடும் தகவல்

வெலிவேரிய பகுதியில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மஹர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து பேரை கொண்ட குடும்பத்தில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 மற்றும் 25 வயதான தந்தை மற்றும் மகள் ஆகியோரே ஒமிக்ரான் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இருவருக்கும் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே தெரிவித்தார்.

இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவருக்கும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று எவ்வாறு பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இவர்கள் இருவரும் சீதுவ பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாகவும், இருவரும் பஸ்ஸிலேயே பயணித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply