
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கி வைப்பு!
யூ.கே. காலித்தீன்
பிராந்தியத்தின் பழைமைவாய்ந்த முன்னனி நிறுவனங்களில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியமானது இப்பிராந்தியத்தில் பல பொதுச் சேவைகளையும் இதர சேவைகளையும் செய்து வருகின்ற அமைப்பாகும்.
சாய்ந்தமருதுக்கு புதிய பொலிஸ் நிலையம் அமையப்பெற்றபோது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த போதிலும் சமூகத்தில் பல நிறுவனங்கள் முன் வந்து பல உதவிகளை செய்தது அந்த வகையில் இப்பிராந்தியத்தில் முன்னனி அமைப்புகளில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையுடன் அதன் தவிசாளர் பொறியியலாளர் யூ.கே.எம். முசாதிக், நிர்வாக பணிப்பாளர் யூ.கே. காலித்தீன் நிதிப் பணிப்பாளர் ஏ.வி. ஜிப்ரி ஆகியோர் பிரசன்னத்துடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனிடம் குடி நீர் இணைப்பு வழங்கி வைக்கப்பட்டது.