வவுனியாவில் வயல்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓடு!

வவுனியா- தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வயல்வெளியில் நின்றவர்களினால் குறித்த மண்டை ஓடு அவதானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply