புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் விசேட ஆராதனைகள்

புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

இதன்போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த கிறிஸ்தவ மக்கள் விசேட ஆராதனைகளில் கலந்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இதன்போது, தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply