யாழ். பண்ணைப் பாலத்தில் தவறி வீழ்ந்த ஒருவரை மீட்கும் பணிகள் கடற்படையினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழிலுள்ள விடுதியொன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இன்று மாலை (08) பொழுதை போக்குவதற்காக பண்ணை பாலத்திற்கு சென்றுள்ளார்.
குறித்த நபர் தனது தொலைபேசியில் செல்பி எடுக்க முயன்ற போது தவறி வீழ்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று (08) மாலை 5.30 மணியளவில் வீழ்ந்த குறித்த நபரை தேடும் பணிகள் இரவு 8.15 வரையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.