மன்னாரில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.45 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், குருகள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.

புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply