யாழைச் சேர்ந்த 3 பெண்கள் நீர்வீழ்ச்சியில் மாயம்!

ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்டநிலையில், அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், உறவினரான பெண் ஒருவருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 14, 16, 29 வயதானவர்களே காணாமல் போயிருந்தநிலையில், 16 வயதுச் சிறுமி, சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் வத்தளையிலுள்ள உறவினர் வீட்டுக்குச்சென்ற குடும்பத்தினர், உறவினர்களுடன் தும்மோதர நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச்சென்றுள்ளனர். திடீர் மழையால் அருவியில் நீர் வரத்து அதிகரித்து அவர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply