நாட்டில் தற்பொழுது நாளுக்குநாள் கொரோனா தொற்றாளர்களும் கொரோனா மரணங்களும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நாட்டில் கொரோனா நிலைமை எதிர்வரும் தினங்களில் மேலும் தீவிரமடையுமானால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டை முழுமையாக தற்போது முடக்குவது எளிதானதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், கொரோனா தொற்றிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.