மூதூரில் டெங்கு அதிகரிப்பு! மக்களுக்கு எச்சரிக்கை

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் ,அல்லைநகர் மேற்கு, அல்லைநகர் கிழக்கு பகுதிகளில் இன்று (01) வீடுகளில் டெங்கு சோதனையும், சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டன.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹிஹ்மி முகைதீன் தலைமையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ,பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலகம், தோப்பூர் பிரதேச சமூக அமைப்புக்கள் உள்ளிட்டவைகள் தங்களது பங்களிப்புக்களை வழங்கியிருந்தன.

இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021 ஆம் ஆண்டு 132 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாத்திரம் 111 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தெரிவித்தார்.

தற்போது மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் இனங்காணபடுவதனால் பொதுமக்கள் தங்களது வீட்டு சூழலை டெங்கு நோய் பரவாத வகையில் துப்பரவு செய்து வைத்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Leave a Reply