களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 சடலங்கள்: 17 பேர் மாத்திரமே கொரோனாவால் இறந்தவர்கள் – ஜயசுமன

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

குறித்த வைத்தியசாலைக்கு ஆய்வுக்காக சென்றிருந்த அமைச்சர், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் வைத்தியசாலையை அடைய முடியாமலும் தொற்றுநோய்க்கு மத்தியில் சடலங்களை கோருவதற்கான முழுமையான ஆவணங்கள் காரணமாகவும் சடலங்கள் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேநேரம், நோயாளிகளால் வைத்தியசாலை நெரிசல் அடைவது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

எவ்வாறிருப்பினும் அது இப்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவொரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே நடந்தது என்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் இரண்டு வார்டுகளை ஏற்பாடு செய்துள்ளதால், தற்போது பிரச்சினை முடிந்துவிட்டது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *