தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றம் வெப்பச்சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைவீழ்ச்சியும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மிதமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *