சிடி பகிரங்க டென்னிஸ்: ஜெனிக் சின்னர் சம்பியன்

ஆண்களுக்கே உரித்தான சிடி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜெனிக் சின்னர் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜெனிக் சின்னர், அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்ட்டை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என ஜெனிக் சின்னர் போராடி கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய மெக்டொனால்ட், செட்டை 6-5 என வென்று பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய ஜெனிக் சின்னர் 7-5 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

தரவரிசையில் 24ஆவது இடத்தில் இருக்கும் 19 வயதான ஜெனிக் சின்னர், ஏடிபி 500 தொடரில் சம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *