வடக்கு உட்பட சில பகுதிகளில் மழை பெய்யும் சத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உண்டு.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply