வவுனியாவில் செலுத்தப்பட்ட இரண்டாவது டோஸ் தடுப்பூசி

வவுனியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் காலை 8 மணி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியாநகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், நகரம் வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று செலுத்தப்பட்டது.

குறித்த பிரிவுகளை சேர்ந்த கிராம மக்களுக்கு கடந்த மாதம் 7 ஆம் திகதி சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply