டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (08) மாலையுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி புள்ளி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.
39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை அமெரிக்கா பெற்று முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் அடங்கலாக 88 பதக்கங்களை மொத்தமாக பெற்று 2 ஆம் இடத்தில் சீனா உள்ளது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 58 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தினை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 22 தங்கம் உட்பட மொத்தமாக 65 பதக்கங்களை பெற்று பெரிய பிரித்தானியா நான்காவது இடத்திலும், 20 தங்கம் உட்பட மொத்தமாக 70 பதக்கங்களை பெற்று ரஷ்ய ஒலிம்பிக் குழு ஐந்தாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.