ஊர்காவற்றுறை – அராலி பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன உட்பட அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் 29 வது நினைவு தினம் இன்று (09) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

காங்கேசன்துறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்து கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய பாரிய தாக்குதலை அராலி ஊடாக நடத்துவதற்கான இறுதிக்கட்ட நகர்வை கடந்த 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம 08 ஆம் திகதி பார்வையிட சென்றபோதே இவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
