தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள்  இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இதன்படி எதிர்வரும் 13,14,15 மற்றும் 20,21,22 ஆகிய நாட்களில் கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகள் ஆகியவற்றுக்கு பக்தர்கள் வழிபாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க திறந்த வெளியில் தனித்தனி கடைகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களை விற்பனை நிலையங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply