வவுனியா – மதவுவைத்தகுளம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக இனந்தெரியாத நபர்கள் முகத்தில் வர்ண சாயங்கள் பூசியவாறு நிர்வாணமாக வீடுகளில் நுழைவதாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த மர்ம நபர்கள் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மர்ம நபர்களின் அட்டகாசங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டும் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.