அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (09) காலை யாழ். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘சம்பள உயர்வை கேட்கவில்லை எமது சம்பளத்தையே கேட்கிறோம்’, ‘பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து’, ‘ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை’, ‘இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே’, ‘இருபத்து நான்கு வருட ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்கு’ உள்ளிட்ட பாதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குhலை 11 மணிக்கு பருத்தித்துறை நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைந்தவுடன் நிறைவுற்றது.