வீட்டில் தனியாக இருந்த மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

இந்தியாவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கருவாளூர் பகுதியை சேர்ந்தவர் உத்தமன்.

இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிகளுக்கு மகள் ஆதிரா (22) என்ற மகள் உள்ளார். இவர், திருவனந்தபுரம் அருகே செம்பழந்தியில் ஒரு கல்லூரியில் எம்ஏ இறுதியாண்டு படித்து வந்தார்.

இதையடுத்து, சம்பவதினத்தில், கடந்த நாள் மாலை உத்தமன் வெளியே சென்றிருந்தார். தாய் சரஸ்வதி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார்.

Advertisement

அப்போது வீட்டு கதவு அடைக்கப்பட்டிருந்தது. வெகு நேரம் தட்டியும் திறக்கவில்லை. இந்த நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது,. அப்போது மின்விசிறியில் ஆதிரா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை கண்டதும் சரஸ்வதி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஆதிராவை மீட்டு புனலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து புனலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காதல் பிரச்சனை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *