இலங்கையில் தற்போது கொரோனா வைரஸின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது,
பூட்டியிருக்கும் வீடுகளிலிருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.
இது தொடர்பில் கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர இது தொடர்பில் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சர்வதே ஊடகங்களும் இலங்கை தொடர்பில் இந்தியாவில் கண்ட காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா? என தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் திடீரென நபர் ஒருவர் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
இருப்பினும், காவல்துறையினர் வந்து 1990-க்கு அழைத்து ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்ததையயடுத்து குறித்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பேருந்து நிலையம், நிலைமை மோசமாக உள்ளது, நீங்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் #COVID19 என தலைப்பிட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று பரவி வருகின்றது.
