திட்டமிட்டபடி செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலைகளை மீள திறக்கப்படமாட்டாது!

முன்னர் திட்டமிட்டபடி செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலைகளை மீள திறப்பது சாத்தியமற்றது என கல்வியமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் அதிபர்களுக்கு தடுப்பூசியை ஏற்றியதன் பின்னர், சகல பாடசாலைகளும் செப்டெம்பர் முதல்வாரத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

எனினும், ‘முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’என்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளார்

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *