நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி இஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, அவரது தந்தை, தம்பி மற்றும் புரோக்கர் பொன்னையா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு, இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.