கனடாவில் தவறாக பெயரிடப்பட்டு விற்கப்படும் கடல் உணவுகள்!

கனடாவில் விற்கப்படும் கடல் உணவுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமாக தவறாக பெயரிடப்பட்டுள்ளது ஓசியானா கனடாவின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கனடாவின் நான்கு முக்கிய கனேடிய நகரங்களில் உள்ள மீன்களின் டிஎன்ஏ மாதிரிகளை ஓசியானா சோதனைக்கு உட்படுத்தியதில், 46% அளவுக்கு தவறாக பெயரிடப்பட்டுள்ள மீன்களையே கனேடிய மக்கள் உணவாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், மாண்ட்ரீலில் 52 சதவிகிதமும் மீன்கள் தவறாக பெயரிடப்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஹாலிஃபாக்ஸில் 32 சதவிகிதமும், ரொறன்ரோ மற்றும் ஒட்டாவாவில் 50 சதவிகிதமும் மீன்களுக்கு தவறாக பெயரிடப்பட்டு பொதுமக்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது போன்ற மோசடிகள் சில்லறை விற்பனை கடைகளை விடவும் உணவகங்களில் அடிக்கடி நடக்கிறது என கூறப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளைப் போல அதிக பணம் சம்பாதிப்பதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

விலை மலிவான மீன்களை அதன் பெயர்களை தவறாக குறிப்பிட்டு அதிக விலைக்கு விற்பதை பெரும்பாலான உணவகங்கள் வாடிக்கையாக செய்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும், பொதுவாக தவறாக பெயரிடப்பட்டு வாடிக்கையாளர்களை ஏமாறச்செய்யும் சில மீன்களில் snapper, butterfish, yellowtail மற்றும் white tuna ஆகியவை அடங்கும் என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, கடல் உணவுகளை தவறாக பெயரிடுவதைப் பற்றி 87 சதவிகித கனேடியர்கள் கவலைப்படுவதாகவும், பணக் காரணங்களுக்காக மட்டுமின்றி உடல் நலன் தொடர்பிலும் அச்சம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *