நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு!

நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென தேசிய தொழிற்சங்க முன்னணியின் தவிசாளர் சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழப்பதாகவும் அசராங்கம் சிரேஸ்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதில் முன்னுரிமை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாது 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதனை ஆரம்பித்திருந்தது என ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றுக்கு நாள் தோறும் 70 சிரேஸ்ட பிரஜைகள் பலியாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய உரிய நேரத்தில் இவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படாமையே இந்த மரணங்களுக்கான ஏது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய தகவல்களை சுகாதார அமைச்சு மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *