பிரபல நடிகை நயனதாராவுக்கு கொரோனா!

பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் எனக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தற்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வீட்டிலேயே சுய தனிமையில் உள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேவேளை,இலங்கையின் பிரபலமான சிங்கள இசைக் கலைஞர் சுனில் பெரேராவும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *