கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளை கொரோனா மரணங்களும் உச்சத்தை தொடுகின்றது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் மேலும் 111 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 111 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
மேலும் , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.