அதிபர், ஆசிரியர் சங்கங்களினால் இன்று (09) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் ஒலிபெருக்கி சாதனங்கள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்ட பட்டா வாகனம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர் சங்கங்களினால் அரசுக்கெதிராக சில கோரிக்கைகளை முன்வைத்து வாகனப்பேரணி ஒன்று இன்று (09) இடம்பெற்றிருந்தது.

குறித்த பேரணியில் ஒலிபெருக்கி சாதனங்கள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்ட பட்டா வாகனமொன்று யாழ். பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி சாதனங்களை பொது வெளியில் பயன்படுத்த அனுமதி பெறப்படாத காரணத்தினாலேயே குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகன சாரதியும், வாகனத்தில் ஒலிபெருக்கி சாதனங்களை கட்டியவரும் நாளை (10) விசாரணைகளுக்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.