விலை அதிகரிப்பால் பச்சைமிளகாய் கடும் உறைப்பு

கம்பஹா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை நேற்று (02) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகளின் தட்டுப்பாட்டால் விலை அதிகரித்தாலும், வியாபாரிகள் தமது இஷ்டத்திற்கு விலையை அதிகரிப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

சில விற்பனையாளர்கள் மரக்கறிகளை விலையைக் காட்டாமல் விற்பனை செய்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் விலையை காட்டாமல் விற்பனை செய்வது தொடர்பில் உரிய அரச நிறுவனம் ஏன் செயற்படவில்லை என்பது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென சில வர்த்தகர்களும் நுகர்வோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply