
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா, அதற்கு பிறகு சினிமாவில் சிறிய ரோல்களில் பல படங்களில் நடித்தார்.
ஜோம்பி படத்தில் லீட் ரோலில் நடித்தாலும் அவரது கவர்ச்சி அளவிற்கு நடிப்பு பேசப்படவில்லை. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடிக்க யாஷிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
கடமையை செய் படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் யாஷிகாவின் நடிப்பு திறமையை படக்குழுவினர் பெரிய அளவில் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா கூட இந்த படம் யாஷிகாவின் திரைப்பயணத்திற்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் என பாராட்டி இருந்தார். கடமையை செய் படத்தை தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க யாஷிகா ஒப்பந்தமாகி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் மிக மோசமாக காயமடைந்தார் யாஷிகா. அவரது நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவானி இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களுடன் வந்த மேலும் இரு நண்பர்கள் சிறிய காயத்துடன் தப்பித்துக் கொண்டனர்.
காரை மிக வேகமாக ஓட்டி தோழி உயிரிழக்க காரணமாக இருந்ததால் யாஷிகா மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரின் டிரைவிங் லைசென்ஸும் முடக்கப்பட்டது.
விபத்தில் இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் பல எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவிற்கு பல சர்ஜரிகள் செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார் யாஷிகா.
சுயநினைவிற்கு வந்த யாஷிகா, தோழி பவானி உயிரிழந்ததை அறிந்தது தெரிந்து கதறி அழுதுள்ளார். அத்துடன் தான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடனேயே வாழ்வேன் என இன்ஸ்டாகிராமில் மிக உருக்கமாக கருத்து பதிவிட்டிருந்தார்.
அத்துடன், அடுத்த 5 மாதங்களுக்கு தன்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. இயற்கை உபாதைகள் உள்ளிட்டவைகளை படுக்கையிலேயே கழித்து வருவதாகவும், தான் படுத்த படுக்கை ஆகி விட்டதாகவும். கடவுள் தன்னை நன்றாக தண்டித்து விட்டதாகவும் தனது ஹெல்த் பற்றி அவரே அப்டேட் வெளியிட்டார்.
இதனால் யாஷிகாவை ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பாளர்கள் வேறு நடிகைகளை வைத்து படமெடுக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனராம். இதனால் யாஷிகா கைவசம் இருந்த பல பட வாய்ப்புக்கள் கை நழுவி போய் விட்டதாம்.
தற்போது தான் சினிமாவில் நல்ல வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்து வந்த நிலையில், இப்போது கிடைத்த வாய்ப்புக்கள் பறி போய் வருவதால் அதிர்ந்து போய் உள்ளாராம் யாஷிகா.
ஆனால் அவரது உடல்நிலை தான் முக்கியம் எனவும், முதலில் உடல்நிலை சரியாக எழுந்து நட என யாஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். உடல்நிலை சரியான பிறகு வாய்ப்புக்களை தேடி கொள்ளலாம் எனவும் கூறி தேற்றி வருகின்றனராம்.