சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் சிக்கிய நபர்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் திவுலப்பிட்டி – துன்கஹா பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

அத்தோடு , அவரிடம் இருந்து 11,000 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 770, 000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *