தொடரும் ஆசிரியர் – அதிபர்களின் போராட்டம்: ஜனாதிபதியினால் குழு நியமனம்!

ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

எவ்வாறிருப்பினும் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இணையவழிக் கற்பித்தலைப் புறக்கணித்து முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம்  இன்று 29ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *