நாட்டில் ஒமிக்ரான் அலை ஏற்படாது! சந்திம ஜீவந்தர தெரிவிப்பு

நாட்டில் ஒமிக்ரான் தொற்று அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதால் ஒமிக்ரான் அலை ஏற்பாடுவதற்கான வாய்ப்பில்லை.

எனினும், ஒமிக்ரான் தொற்றுப் பரவலிலிருந்து மீள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

ஒமிக்ரான் தொற்றுக்குள்ளான பலர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியில் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை அடுத்தவாரமளவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் 233 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்! மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு

Leave a Reply