சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்!

சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான பரிசோதகர் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தி சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம் பிரதேச சபையின் சுகாதார ஊழியருக்கு இணுவில் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்றலில் சுன்னாகம் பிரதேச சபையின் அனுமதி பெறாது நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை, அவர் இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு கூறிய வேளையில், குறித்த நடை பாதை வியாபாரியினால் வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் அச்சுறுத்தப்பட்டதோடு, சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது ஒமிக்ரான்! விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Leave a Reply