‘நாங்கள் விளிம்பில் இருக்கிறோம்’ – மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை

COLOMBO (Tamil); நாடு முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளிலும் இலங்கை அதிகபட்சமான சுகாதாரப் பாதுகாப்புத் திறனை எட்டியுள்ளதாக ‘கொவிட் -19: நாங்கள் விளிம்பில் இருக்கிறோம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

“அரச பிணக்கிடங்குகள் ஏற்கெனவே அவற்றின் சேமிப்பு திறனை மீறிவிட்டன. ஒருவருக்கு நிதி வசதிகள் இருந்தாலும் நிலைமை சமமான அளவில் மோசமாக உள்ளது, ஏனெனில் தனியார் துறையும் அதன் வரம்பினை அண்மித்துள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளாந்த மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள மருத்துவ நிபுணர்கள் சங்கம், இலங்கை தற்போது உலகின் மிக உயர்ந்த கொரோனா இறப்பு விகிதங்களை பதிவு செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கால அவகாசம் இல்லாததால், மிகவும் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களின் சங்கம் கருதுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆபத்தான நோயாளிகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய மருத்துவ நிபுணர்களின் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

‘உலகின் சிறந்த தடுப்பூசி செயற்றிட்டம் தற்போது எங்களிடம் இருந்தாலும் தற்போதைய தடுப்பூசி செயற்பாடு நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி வரும் தொற்றுநோயின் தற்போதைய அலை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *