இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா பிரச்சினை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது பற்றி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் பால்மா இறக்குமதியின்போது, இறக்குமதி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது குறித்து இதுபோது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதற்கமைய, பால்மா இறக்குமதியின்போது, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சில வரிகளை குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது