பண்ணையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா!

பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் பணியாற்றும் இளைஞன் பண்ணை பாலத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்றதால் தவறி விழுந்து மரணமடைந்தார்.

பின்னர் அவரின் சடலம் நேற்று தீவிர தேடுதலின் அடிப்படையிலே நேற்று திங்கட்கிழமை மீட்க்கப்பட்டது.

அதன் பின்னர் அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *