நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் அதன் பிழள்வுகள் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் வைத்தியசாலை விடுதிகளும் கொரோனா சிகிச்சை விடுதிகளும் நிரம்பி காணப்படுகின்றன.
வைத்தியசாலை பிணவறைகளிலும் சடலங்கள் நிரம்பியுள்ளதால் பல வைத்தியசாலைகளில் துர்நாற்றம் எழுவதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியிருந்தன.
இதனால் தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படவுள்ளன.
குறித்த விடயம் தொடர்பிலான ஆலோசனைகளை அமைச்சரவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு வழங்கியுள்ளது.
இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.