
வெள்ளவத்தை மயூரபதி, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர பாற்குட பவனி பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டும், அமுலில் இருக்கும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றும் வகையிலுமே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மயூரபதி பாற்குட பவனி நாளை (11) புதன்கிழமை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது