நாடு முடக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எந்த காரணத்திற்காகவும் நிகாரிக்கப்படவில்லை.
தேவைப்படும் சந்தர்ப்பத்தில் எந்த வேளையிலும் நாடு முடக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் கூடிய முடக்கங்களை விதிப்பது குறித்து அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள நிலையில் நாட்டை முடக்குவதே ஒரே தீர்வு.
எல்லா வழிகளிலும் நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே முடிவுகள் எட்டப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே நாட்டை முடக்க அரசாங்கம் தயங்குகின்றது என தெரிவித்துள்ளார்.